• சற்று முன்

    தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதியிலும் விரைவில் இடைதேர்தல் வரும் என தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


    டிடிவி தினகரன் அணியில் இருந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதி மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் சேர்த்து 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்ற சூழல் உள்ளது.இந்த 20 தொகுதிகளில் ஒன்றான பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தேர்தல் பணிகளை தீவிரமாக முடிக்கிவிட்டுள்ளது.இந்தநிலையில் பூவிருந்தவல்லியில் தமிழக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் ஆவடி நகரத்தில் இருந்து கூடுதலாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அறிவித்தனர். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் தமிழகத்தில்  காலியாக உள்ள 20 தொகுதியிலும் விரைவில் தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையமும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் தேர்தல் வரும் என கூறியுள்ளது.இதனால் அனைத்து தொகுதியில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் பூவிருந்தவல்லி தொகுதியில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெரும் என்று தெரிவித்தார்.ஜெயலலிதா மறைவிற்கு  திமுகவும் ஒரு காரணம் என தம்பி துறை கூறியிறுப்பது.ஜெ மறைவிற்கு பல  காரணங்கள் இருந்தன அதில் திமுக ஒரு காரணம் என்றார்.மேலும் அமமுக ,அதிமுக இணைப்பு குறித்து  எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என திட்டவட்டமாக மறுத்த அவர்  டிடிவி தவிர்த்து வேறு யார் வந்தாலும் தாய் கழகத்தில் இணைத்து கொள்வோம் என்றார்.இதில் திருவள்ளூர் மாவட்ட அம்மா பேரவை இனை செயலாளர் ரவிசந்திரன், ஜாவித் அகமத்,ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு,நகர செயலாளர் தேவேந்திரன், எச்.சாபி,தீனதயாளன்,முல்லை தயாளன் உட்பட பூவிருந்தவல்லி, ஆவடி ,திருவேற்காடு நகர நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்..


    செய்தியாளர் : B.சுஜாத்தா போஜராஜன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad