• சற்று முன்

    திருவாடானை கிழக்கு கடற்கரை சாலை .S .P . பட்டிணம் அருகே அரசு அனுமதியின்றி பதுக்கி வைத்த மது பாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது ,


    திருவாடானை அருகே SP.பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 85 மதுபாட்டில்கள் மற்றும் டூவிலர் பறிமுதல், ஒருவர் கைது.

    இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே SP.பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதுக்காடு பகுதியில் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக மதுபாட்டில்கள் டூவீலரில் கடத்தி வருவதாக மாவட்ட எஸ்.பி. ஓம் பிரகாஷ்மீனாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் மாவட்ட எஸ்.பி. ஓம் பிரகாஷ்மீனா உத்தரவின் பேரில் SP.பட்டிணம் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் SP.பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த டூவீலரை மடக்கி சோதனையிட்டதில், அரசு அனுமதியின்றி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 85 மதுபாட்டில்கள் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்து, மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா, பெருமகளூரை அடுத்த காந்தி நகரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ராஜாஜி வயது - 44 என்பவரை கைது செய்து விசாரணை.செய்து வருகின்றனர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad