• சற்று முன்

    கோவில்பட்டி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட ஓடையை ஊர் பொதுமக்கள் அகற்றினர்.



    கோவில்பட்டி அருகே பசுவந்தனையில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஓடையை ஊர் பொதுமக்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காற்றாலை நிறுவனங்களால் காற்றாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பசுவந்தனை பஞ்சாயத்துக்குட்பட்ட பெரியகுளம் கண்மாய் நீர்வரத்து ஓடையை ஆக்கிரமிப்பு செய்து தனியார் காற்றாலை நிறுவனம் அமைத்துள்ளது. இதனால் ஆலிபச்சேரி தெற்கு பொம்மையாபுரம் வடக்கு பொம்மையாபும் கைலாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரியகுளத்தில் வரவேண்டிய ஓடையை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5000 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் இந்த கண்மாயால் பயன் அடைந்துள்ளது தற்போது  ஆக்கிரமிப்பு காரணமாக மழையால் வரக்கூடிய நீரானது கண்மாய்க்கு செல்லாமல் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுகிறது. அவ்வாரு தடுத்து நிறுத்தப்பட்டதால் விவசாய நிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆத்திரமடைந்த 5 கிராம மக்களும் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று தங்களது சொந்த செலவில் தனியார் காற்றாலை நிறுவனம் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு செய்ததை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். இனியும் இந்த காற்றாலை நிறுவனமானது ஆக்கிரமிப்பு செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad