Header Ads

  • சற்று முன்

    கனரக வாகனத்தால் ஒரு தாயின் உயிர் பலி போக்குவரத்துக்கு அதிகாரிகளின் அலட்சியம்




    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் என்றாலே பல்வேறு பெருமைக்குரிய நகரம் ஆகும். திருப்பத்தூரை சுற்றி சுமார் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அம்மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்காக தினம்தோறும் திருப்பத்தூர் நகரை நோக்கி வருகின்றனர். இப்படி இருக்கையில் பொதுமக்களின் நலன் கருதி மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு திருப்பத்தூர்  நகருக்குள் கனரக வாகனங்கள் காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரை செல்ல தடை
    விதிக்கபட்டது. அதற்காக வாணியம்பாடி அருகே செக்போஸ்ட் அமைத்து திருப்பத்தூர் வழியாக வரும் லாரிகள் மற்றும் இதர கனரக வாகனங்கை தடுத்து நிறுத்தி இரவு 9 மணி அளவில் தினம் தோறும் விடுவது வழக்கம்.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சவளூர் பகுதியைச் சார்ந்த ராஜேஸ்வரி 38 இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன் மகனுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது  திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில்  நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேஸ்வரியின் தலையின் மீது  பின்னாடி வந்த லாரி ஏறி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். தன் தாயின் இறப்பை கண்முன்னே பார்த்த மகன் கதறி அழுதார். இதுகுறித்து  திருப்பத்தூர் நகர போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

    செய்தியாளர்  .ர. நித்தியானந்தன் - திருப்பத்தூர்








    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad