Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுற்றுவாழ் மக்கள் ஆண்கள் பெண்களுக்கான நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி செயலாளர் பரிசுகளை வழங்கினார்


    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளில் சுமார் 1 முதல் 17 வரை உள்ள ஊராட்சிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் மாவட்ட பிரிவின் கீழ் விளையாட்டுப் போட்டி கதிராமங்கலம் ஊராட்சியில்  நடைபெற்றது.


    இப்போட்டியில் தனி அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார். ஆணையர் ரகுபதி முன்னிலையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் சிறப்புரையாற்றினார்.கதிரமங்கல ஊராட்சி செயலாளர் வெங்கடாஜலபதி நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசளித்து நன்றியுரையாற்றினார். உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஜான்சன் மற்றும் மேத்யூ ஆகியோர் இப்போட்டியில் கலந்து கொண்ட ஆண்கள் பெண்களுக்கு விளையாட்டின் விதி முறைகள் மற்றும் வழிமுறையின் அடிப்படையில் போட்டியை நடத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் 100மற்றும் 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் கைப்பந்து, தட்டுஎறிதல், குண்டு எறிதல், மற்றும் பல போட்டிகள் நடைபெற்றது இப்போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு  நிகழ்ச்சியின் இறுதியில் சில்வராளான தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம்,  வெண்கல பதக்கம், ஆகிய பதக்கங்களும் மற்றும் சான்றிதழ்களும் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.

    செய்தியாளர்  : திருப்பத்தூர் - நித்யனநாதன் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad