திருவாடானை யில் பண்டி மதுபானம் கடத்தியவர்களை மதுவிலக்கு போலீசார் பிடித்தனர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையிலான மதுவிலக்கு போலீசார் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஒரு காரில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக ராமநாதபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் மதுவிலக்கு போலீசாருடன் எஸ்.பி.பட்டிணம் போலீசாரும் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்து கொண்டிருந்த ஒரு காரை சோதனைச் சாவடியில் மடக்கி சோதனையிட்டதில் காருக்குள் அனுமதியின்றி பதுக்கி கடத்தி வரப்பட்ட 63 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அதனை கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுடலைமாடசாமி (29) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து வயது (35) இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : தங்கபாலன்
கருத்துகள் இல்லை