Header Ads

  • சற்று முன்

    சென்னை புழல் சிறையில் அடையாள அணி வகுப்பு நடைபெற்றது


    சேலம் ரயில் கொள்ளை தொடர்பாக குற்றவாளிகளை கண்டறிய புழல் சிறையில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 5 சாட்சிகள் கொண்டு நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பு 4 மணி நேரம் நடைப்பெற்றது.


    சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரூ.323 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து ரெயில் மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கடந்த 2016ம் ஆண்டு சென்னை-சேலம் விரைவு ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டபோது  மேற்கூரையை துளையிட்டு ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பிரதேசத்தை சேர்ந்த பார்தி இன கொள்ளை கும்பல் தலைவன் மோஹர்சிங், தினேஷ், ரோஹன் உள்பட 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.  

    ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட  சம்பவம் தொடர்பாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உள்ள 7 சிறை கைதிகளிடம்  ஜார்ஜ் டவுன் விரைவு நீதிமன்ற மாஜிஸ்டிரேட் ஆணந்தராஜ்  தேனாம்பேட்டை   மாஜிஸ்டிரேட்  சுப்ரஜா ஆகியோர் தொடர்ந்து அடையாள அணிவகுப்பை நடத்தி  சாட்சிகளாக இருந்த 2 மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்  நிறுத்தி அடையாளம் காட்டப்பட்ட்டு ஐந்து பேரிடம் விசாரணை முடிந்தது.

    ஜார்ஜ்டவுன் விரைவு நீதிமன்ற மாஜிஸ்டிரேட்  ஆனந்தராஜ் விசாரணையை 
    முடித்து விட்டு சென்ற நிலையில் தற்போது தொடர்ந்து மீதமுள்ள
    இரண்டு கைதிகளிடம தனித்தனியாக  சுப்ரஜா விசாரணை நடத்தினார். 
    தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாக  விசாரணை நடைபெற்றது குறிப்பிட தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad