Header Ads

  • சற்று முன்

    உலகிலே அதிக பெண் விமானிகளை கொண்ட விமான நிறுவனம் இந்தியாவில் தான் உள்ளது



    கடந்த சில வருடங்களாக சுற்றுலா சார்ந்த விடயங்களில் மக்கள் அதிகளவு பணத்தை செலவழிக்கும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது.

    உலக சுற்றுலா கழகத்தின் அறிக்கையின்படி, கடந்த 2010ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டு உலகளவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 350 மில்லியன் அதிகரித்துள்ளது.

    எந்த விமான சேவை நிறுவனத்தில் அதிக பெண் விமானிகள் பணிபுரிகிறார்கள்?

    உலகம் முழுவதுமுள்ள வர்த்தக விமானங்களின் விமானிகளில் வெறும் 5.18 சதவீதத்தினரே பெண்களாக உள்ளனர். உலகிலேயே இந்தியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள்தான் அதிகளவில் பெண் விமானிகளை பணியில் சேர்த்துக்கொள்கிறார்கள். அதாவது, மொத்த இந்திய விமானிகளில் 12.4 சதவீதம் பேர் பெண்களாவர் .எதிர்காலத்தில் விமானிகளுக்கு ஏற்படவுள்ள கடுமையான பற்றாற்குறையை சமாளிக்கும் வகையில் இந்தியா விமான சேவை நிறுவனங்கள், பெண்கள் விமானியாவதற்கு அதிகப்படியான ஊக்கத்தை அளித்து வருவதாக சர்வதேச பெண் விமானிகள் அமைப்பின் தலைவர் கேத்தி மெக்கல்லோ கூறுகிறார்.

    இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் வர்த்தகரீதியான விமான பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயருமென்று போயிங் நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad