• சற்று முன்

    பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டீஸ் : வழங்கினார் எம்எல்ஏ


    பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் பொதுசுகாதாரதுறை பணியாளர்கள் அலோசனைக்கூட்டம் நகராட்சி ஆணையாளர் வெங்கடாஜலம் தலைமையில் நடைபெற்றது.

    நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். துப்புரவு மேற்பார்வையாளர்கள்  தாஸ், குமார், கொளஞ்சி, நகராட்சி எஸ்.பி.எம்.மேற் பார்வையாளர் சாருமதி, சரண்யா, செந்தமிழ், ஜான்சி, ரிஷ்வான், பிரீதா, உமாகலாவதி, அஞ்சுகம், செல்வி, பரிமளம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கூட்டத்தில் ஆணையாளர் வெங்கடாஜலம் பேசும் போது கூறியதாவது:

    பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணிதீவிரமாக நடந்து வருகிறது. இந்த நோய்பரப்பும் கொசு புழுக்களை கண்டறிந்து ஒழிக்க 50 களப்பணியாளர்கள் 8 மேற்பார்வையளர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.
    இந்த கொசுப்புழுக்கள் எங்கு, எப்படி, எவ்வாறு உற்பத்தியாகிறது. இதனை எவ்வாறு ஒழிப்பது என்பது குறித்த முழுவிவரங்கள் அடங்கிய ஒருலட்சம் நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு நகராட்சி பொது சுகாதார துறையினருக்கு சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வழங்கி உதவியுள்ளார்.
     இந்த டெங்கு மற்றும்  பன்றி காய்ச்சல் நோய் பரப்பும் கொசுக்கள் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் நோய் பரப்பு கொசுப்புழுக்களால் ஏற்படும் தீமைகளை குறித்து பொதுமக்களிடம் எடுத்து விளக்கி கூற வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார்.


    செய்தியாளர் : தங்கம் பாலு  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad