Header Ads

  • சற்று முன்

    அரும்பூர் பஞ்சாயத்தில் கழிப்பறை கட்டியதில் அதிகாரிகள் உடந்தையுடன் ஊழல்



    திருவாடானை ஒன்றியத்தில் அரும்பூர் பஞ்சாயத்தில் கழிப்பறை கட்டாமல் கட்டியதாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகளும் உடந்தை என குற்றம் சாட்டுகின்றனர்.

    திருவாடானை ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பூர் பஞ்சாயத்தில் மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான கழிப்பறை கட்டும் திட்டத்தில் பெரும் ஊழல் அதிகாரிகளின் உடந்தையோடு நடந்தேறியுள்ளது. அரும்பா பஞ்சாயத்தில் மேலஅரும்பூர் கிராமத்தின் அருகே உள்ள சவேரியார்நகர் என்ற கிராமத்தில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் 14 பயணாளிகளுக்கும் மேலாக கழிப்பறை கட்டியது போல புகைப்படங்கள் தயார் செய்து பணத்தை எடுத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து விசாரித்த போது இந்த கிராமத்தில் ரோஸ்மேரி, காளியம்மாள், எழுவக்காள், காளிமுத்து, ரெஜினா மேரி, சுகந்தி, காளியம்மாள், சந்தனமேரி, ஆரோக்கியமேரி, ஞானசெளந்தரி, சாந்தி, நீலா ரோஸ், மலர், ஆரோக்கிய மேரி ஆகியோர் பெயர்களில் உள்ள வீடுகளுக்கு கழிப்பறை கட்டியதாக ஆவணங்கள் தயார் செய்து பெரும் தொகை எடுத்துவிட்டார்கள். இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் பஞ்சாயத்து செயலாளரை கேட்டால் பி.டி.ஒ வைப் பார்க்க சொல்கிறார். பி.டி.ஓ அந்த காண்டராக்ட்காரர் வரட்டும் என்ன என்று பார்க்கிறேன் என்று மலுப்பலான பதில் கூறுகிறார்கள். மாறாக திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் சில அதிகாரிகளிடம் விசாரித்த போது உங்களது பெயரில் கடந்த 2018 மார்ச், ஏப்ரல் மாத்த்திலேயே கழிப்பறை கட்டிவிட்டதாக பில் எடுக்கப்பட்டுவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். எனவே இது குறித்து அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்து  கழிப்பறை கட்டிதரவேண்டும் என்றும் ஊழல் செய்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்போவதாகவும் அதற்கும் செவி சாய்க்காத பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்கள். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad