Header Ads

  • சற்று முன்

    இளைஞர்கள் கோரிக்கை நிறைவேற்றுமா

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாச்சல் கிராமம் கீழ்வட்டத்தில் பல குடும்பங்களுக்கு டெங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குடும்பத்தினர் காலி இடத்தில் மாடுகளை கட்டி அதன் கோமியம் மற்றும் சாணம் மற்றும் தேவையில்லாத  தென்னை பட்டைகள் கொட்டாங்குச்சிகள் சைக்கிள் டயர்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி இருப்பதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் அக்கம் பக்கத்தினர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இக்காரணத்தால் இரவில் கொசுவர்த்தி இல்லாமல் தூங்க முடிவதில்லை இங்கு கொசுக்கள் 2 லட்சம் கொசுக்கள் முதல் 3 லட்சம் வரை சாதாரணமாக பறக்கின்றன. டெங்கு கொசு உருவாதலும் அதனால் ஏற்படும் அபாயம் தெரியாமல் இக்கிராமத்தில் போதிய விழிப்புணர்வும் இல்லாமல் இருப்பதனாலேயே இதுபோன்ற சம்பவத்தில் பொதுமக்கள் ஈடுபடுகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இதுபோல செய்யக்கூடாது என எடுத்துரைக்கவும் திரும்பவும் இதுபோல் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் மற்றும் இளைஞர்கள் கோரிக்கையாக உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad