Header Ads

  • சற்று முன்

    4 வருட சேமிப்புத்தொகையை கஜா புயலுக்கு நிவாரண நிதியாக வழங்கிய பள்ளி மாணவன்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளத்தினை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் அக்சை கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்கள், மாணவர்களுக்கு உதவிடும் வகையில் கடந்த  4 ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாயை முதல்வர் புயல் நிவாரண நிதிக்காக விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமாரிடம் வழங்கினார். புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைவரும் உதவிட வேண்டும், மேலும் எதிர்கட்சிகள் இந்த நேரத்தில் அரசியல் செய்ய கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளத்தினை சேர்ந்தவர் ஜீ.வி.மார்க்கண்டேயன். இவர் விளாத்திகுளம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இவருடைய மகன் அக்சை. இபவர் அங்குள்ள அம்பாள் வித்யாலயா பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்களை தொலைக்காட்சிகளில் பார்த்த இந்த மாணவர் அந்த மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாணவன் அக்சைக்கு ஏற்பட்டுள்ளது. 

    இதனை தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக தான் சேமித்து வைத்திருந்த 25 ஆயிரத்தினை கொடுக்க முடிவு செய்து அதனை வரைவோலையாக முதல்வர் புயல் மற்றும் பொது நிவாரண நிதி என்ற பெயரில் எடுத்தது மட்டுமின்றி, இது தொடர்பான வீடீயோ ஒன்றினையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடீயோ பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் மாணவன் அக்சை 25 ஆயிரத்திற்கான வரைவோலையை விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமாரிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாணவன் அக்சை கூறுகையில் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும், தன்னை போன்று எல்லோரும் உதவ முன் வரவேண்டும் என்றும், மக்களுக்கு தன்னம்பிக்கை தர வேண்டுமே தவிர, எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் செய்ய கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad