Header Ads

  • சற்று முன்

    திருப்தி தேசாய் யார்? இந்துவா ? எச்.ராஜா காட்டம்



    வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலய மீட்புக் குழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிவித்தார். முன்னதாக வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்ய வந்துள்ள திருப்தி தேசாய் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது திருப்தி தேசாய் எனப்படுவது யார்?  அவர் இந்துவா என கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்றம் 10 முதல் 50 வயது உள்ளவர்கள் சபரிமலைக்கு  போகலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் சபரிமலை கோவில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் வேண்டாம் என்று மறுகின்றனர். சுவாமி ஐயப்பன் மீது பக்தி இல்லாமல் 41 நாள் விரதம் இருந்து அதற்கான உடை அதற்கான விதிமுறைகளை பின்பற்றாமல் யார் வேண்டுமானாலும் போகலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதா?  என கேள்வி எழுப்பினர். ஐயப்பன் மீது பக்தியோடு 41 நாட்கள் விரதம் இருந்து அதற்கான உடை  விதிமுறைகளோடு இருந்து வரட்டும் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மிக மோசமான இந்து மக்கள் விரோதி என்றும், அவர் முதலமைச்சராக இருப்பதால் ஐயப்பன் கோவில் புனிதத்தை கெடுப்பதற்கு முயற்சி செய்வதாகவும் அதனை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார். கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் கடைசி முதலமைச்சர் இந்த பினராயி விஜயன் என்னும் இந்து விரோதி அதை நாங்கள் நிரூபிப்போம் எனவும் காட்டமாக பதிலளித்தார். அதனைத்தொடர்ந்து தந்தை பெரியார் பற்றிய எச்.ராஜாவின் கருத்துக்கு பதிலளித்து இருந்த பாமக நிறுவணர்  ராமதாஸ் பற்றிய கேள்விக்கு பெரியார் பற்றி என்ன படிக்க வேண்டும் 1944ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் பெரியாரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வெள்ளையர்கள் வெளியேற வேண்டுமாம்,  காந்தியார் சொல்கிறார் காந்தியாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது அதற்கு வைத்தியம் செய்ய இங்கிலாந்தில் இருந்து தான் வைத்தியர்களை வரவழைக்க வேண்டும். வெள்ளையர்கள்  வெளியேறினால் இங்கிலாந்தில் இருந்து கொண்டவாவது சென்னையை ஆள வேண்டும். அவர்கள்  இந்தியாவில் இருந்து வெளியேறினால் பேருந்து, அஞ்சல்,  விஞ்ஞானமும் வெளியேறிவிடும் என்று கூறினாரே பெரியாரின் அந்த கருத்தை படிக்க வேண்டுமா அல்லது தமிழ் காட்டு மிராண்டி மொழி நான் இந்தியை எதிர்த்தது தமிழ் வர வேண்டும் என்பதற்காக அல்ல,  நீங்கள் உங்கள் மனைவியிடம்  ஆங்கிலத்தி பேசுங்கள் வேலைக்காரர்களிடம் ஆங்கிலம் பேசுங்கள் என்று சொன்னாரே அதை படிக்க வேண்டுமா?  அல்லது  மதுரையில் பட்டியல் சமுதாய மக்களை கோவிலுக்குள் கொண்டு செல்லக்கூடாது என்று சொன்னாரே  அதை படிக்க வேண்டுமா?  இதில் நாம் எதை படிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். ஈ.வே.ரா  பற்றிய கருத்துகளை பாடத்திட்டங்களில் இடம்பெற செய்ய வேண்டுமென்றால் இந்த கருத்துகளையும் சேர்த்து வைக்க வேண்டும் . இல்லையென்றால் ஒன்றுமே வைக்கக்கூடாது என கடுமையாக விமர்சித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad