Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே தாரகாசூரனை வதம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் முருகனின் இரண்டாம்படை வீடான திருச்செந்தூருக்கு அடுத்தபடியான பிரசிதிபெற்ற கோவில் கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி திருக்கோவில். இங்குள்ள மூலவர் ஒரு சிரத்துடன், ஆறு கரங்களுடன், இடபுறகாக அமைந்துள்ள மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சிகொடுப்பது இக்கோவிலின் தனிசிறப்பு. மேலும் கந்தச;டி தொடங்கி 6ம் நாளில்தான் சூரசம்காரம் நடைபெறும். 5ம் நாளில் நடைபெறும் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்வு தமிழகத்திலேயே இத்திருத்தலத்தில் மட்டும் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.


    இக்கோவிலில் கந்த ச;டி திருவிழா சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. ஐந்தாம் திருவிழாவான இன்று சூரனின் சகோதரன் தாராசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிN~க அலங்கார தீபாராதனை நடைபெற்றாது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முருகப்பெருமான் முதலில் நகரைச்சுற்றி வலம் வந்தார். தொடந்து தாரகாசூரனிடம் சாமாதன பேச்சிவார்த்தை நடைபெறும் நிகழ்வும், அதனை தொடர்ந்து தாரகாசூரனை முருகர் வேல் கொண்டு வதம் செய்யும் நடைபெற்றது. இதனை காண சுற்றுவட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad