• சற்று முன்

    என்னைக் கொல்லாதே................ ஆசிரியர் - நீலம் மூன் இதன் முன் கதை துவக்கம் ( 28.10.18)



    தன்னை அழைக்கும்  பெண்ணைக் கண்டதும், ஆ...ஆ வெனகத்தி வெளியே ஓட துடித்தான்.அவனின் திடீர் மாற்றம் விளங்காமல் நீலேஷ் என்னாச்சு எதுக்கு இந்த பதட்டம் கெட்டியாக அனைத்து போக விடாமல் தடுத்து நிறுத்த பிரம்ம பிரயத்தனம் செய்தாள். வேர்வை சிந்த சன்னலை சுட்டிக்காட்டினான். இருட்டில் எதுவும் தெரியாமல் ஒன்றுமில்லை நீலேஷ் .ப்ளீஸ் .கஷ்டப் படாதீங்க என்று சொன்னாலும்  திட காத்திரமான வலுவுடைய தேகத்தை  தன்  கைச் சிறகில் பிடிப்பது இதுவே முதல் முறை.அவனுடன் போராடாமல் காலிங்பெல் அழுத்தினாள். நர்ஸ் ஓடி வந்தனர் .அவளின் நிலை அறிந்து தூங்க இஞ்செக்ஷன் போட முயலவும் சிஸ்டர் நான்நல்லா இருக்கேன். ஊசி வேண்டாம். என கத்தினான். நிலா நீயாவது சொல்லும்மா எனக்  கெஞ்சினான் .ஓட மாட்டிங்களே நீலேஷ்  சத்தியமா ஓட மாட்டேன் நிலா மாதர் பிராமிஸ். நர்சை பார்த்து சாரி சிஸ்டர் தொந்தரவுக்கு மன்னிக்கணும். என கேட்டதும் அவர்களின் ஆலிங்கனத்தை  கண்டவர்கள்  மனதிற்குள் பரிகாசமாக  சிரித்து  சென்றனர். 

    சிரிப்பின் பொருள் விளங்காமல் நீங்க ஓட கூடாது சரியா ஒகே நிலா சொன்னாக் கோபம் கூடாது இப்படியே இரவு முழுவதும் நிற்கலாம்.   .எனக்கு.  எவ்விதமான துன்பமும் இல்லை. ஆனந்த சுகமே என காதருகில் மென்மையாக கிசுகிசுத்தான். அப்பொழுதுதான் தான் நிற்கும் நிலை உணர்ந்தாள் ச்சீ சீ நாணத்தில் அவனை அணைத்திருந்த கரத்தை எடுத்து விட்டு அவனை கட்டில் மீது தள்ளிட்டு, உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் மானம் துளிக்கூட கிடையாதுத் த்..தூ த் து என்று துப்பினாள்.. ஆமாம் நீலேஷ் எதுக்கு இவ்வளவு பதட்டம். அப்படியே பயந்துட்டேன். தெரியுமா முகத்துல பாறாங்கல்     விழுந்ததா  மாதிரி    சாரிடா     .என்னவோ  லூசு மாதிரி பிதட்டுரானே என நினைக்கக்  கூடாது. புன்னை மரத்தடியில் ஆன்டி சாயலுடைய பெண்ணை பார்த்தேன்.        அடக் கடவுளே, அதுக்காக இவ்வளவு எமோஷனல் தேவையா, ஏற்கனவே  மனுஷ நாய் கடிச்சு கொதர்னது  பத்தாமல்  பேயிடம் மட்டிகிட்டு வானத்துக்கும் பூமிக்கும் பந்தாடிபரலோகம் போக ஆசையா மேன். என்று புன்னகை  பூத்தாள். 

     உண்மையில் பேய் தந்த வரம் நீ எனக்கு கிடைத்து . இல்லையெனில்  கொக்கி பிடி அதிரடி கிடைச்சிருக்குமா அல்லது கன்னத்தில் பூத்த தாமரை இதழ் விரித்த மொட்டுக்கள் சிவப்பை கண்டு ரசித்திருக்க முடியுமா .யோசி.ம்மா   அது கிடக்கட்டும் ராகினி ஆன்டிக்கும் உங்களுக்கும் பழக்கம்.............    
    ரொம்ப பெரிய   கதை நிலா எங்கம்மா ஜானவி காந்தன் அம்மா அன்னலட்சுமி ஆன்டி ராகினி ஆன்டி மூவரும் ரொம்ப க்ளோஸ் பிரன்ஸ்  கணவன் மனைவியை விடநெருக்கம்.. காந்தன் வீட்டுக்கு மூனாவது வீடு எங்களது  வீடு  என  சொல்லும் போது போதே  .நீலேஷ் கண்கள் கலங்கின                ராதாகிருஷ்ணன் பொம்மை வைச்ச  பிருந்தவன  கார்டன். உள்ள வீடா  ஸூப்பர் அழகுப்பா அந்த பக்கம்  நடக்கும்போது பார்த்து இருக்கிறேன். அதுவா  இம்...அதுதான் .பார்த்து பார்த்து கட்டின வீட்டில் அந்த தெய்வங்கள் ,,,,,,வாழ  கொடுத்து வைக்கல.  பெருமூச்சு விட்டான்..   அவனின் துயரத்தை தாங்காத நிலா அட விடுங்க ஏ சியில் கூட எப்படி வியர்க்குது  பாருங்க.  சமநிலைக்கு கொண்டு வரமுயற்சி செய்தாள்.        எச்சிலைக் கூட்டி   விழுங்கியவன். அம்மா  ரொம்ப  அழகு. தேவதை மாதிரிவெறுமனே முகம் கழுவி குங்குமம் வைத்தால் போதும் பார்த்துகிட்டே இருக்கலாம். மெதுவா பேசுவாங்க  குரல் மிகவும்  மிருதுவாக இருக்கும்.  யாரிடழும் கோபத்தை  காட்ட மாட்டாங்க அவ்வளவு பொறுமை. இரவுல கதை சொல்லுற விதமே தனி,அப்பா என்றுமே அம்மா பேச்சு தட்டியது கிடையாது. ஆனால் , அப்பாவின் தூரத்து உறவு கல்யாணத்திற்குகாக  கார் எடுக்க வேண்டாமென்று வாதாடினார்  அப்பா கேட்கவே இல்லை. 

    விதி யாரை விட்டது அம்மா  ......அம்மா தோள் குலுக்கி  தேம்பினான். ஷ்.ஷ்....ப்ளீஸ். ஆதரவுடன் முதுகை தடவினாள். பத்தாவது படிக்குறேன். டெஸ்டு இருந்தால் ராகினி ஆன்டி வீட்டுலஎன்னை விட்டு போனாங்க. நான் அனாதையா ஒத்த பனை  மரமா வளரனுமென  விதி ம்.....ம்...  அன்னிக்கு நடந்ததை இப்போ நினைச்சாலும் அம்மா கடவுளே ... விம்மி விம்மி அழுதான். அன்றைய வலி இபோ நடப்பது  போன்ற மரண வேதனை. பட்டவங்களுக்கு மட்டுமே தெரியும் இழப்பு என்பது என்னவென்று அதை அச்சமயம் அவன் அனுபவித்தான். நிலா சமாதானம் செய்ய முயன்று தோல்வி அடைந்தாள். இறுதியில்   அவனின் சுமை குறைய அழ வைத்து வேடிக்கை பார்த்தாள்.   அதே நேரம் காந்தன்வீட்டு தோட்டத்தில் கருப்பு உருவம்   மெதுவாக  நுழைந்தது 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad