Header Ads

  • சற்று முன்

    திருமங்கலம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் குடி போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திகுத்து


    திருமங்கலம் அருகே இலங்கை அகதி முகாமில் நண்பர்களுக்கிடையே குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு கத்திக்குத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி கத்தியால் குத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூத்தியார்குண்டு இலங்கை அகதி முகாமை சேர்ந்த ரவிச்சந்திரன் மதம் முரளி வயது 20 இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வருகிறார் இன்று முகாமில் வருகை பதிவேடு செய்யும் கட்டிடம் அருகே தமிழ் நண்பர்கள் நான் ராஜா ஆகியோருடன் குடித்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இந்நிலையில் வாக்குவாதத்தின் போது முரளி ராஜா நோயல் ஆகிய மூவர்க்கும் இவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியதால் ஒருவர்க்கு ஒருவர் தகராறு ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டுள்ளது. இதில் முரளி உறவினர்கள் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்

    பின்னர் நோயல் வயது 20 ராஜா வயது 30 ஆகிய இருவரும் அதிக போதையில் கத்தியை எடுத்து சென்று வீட்டில் இருந்த முரளி வரவழைத்து சராமரியாக கத்தியால் கழுத்துப்பகுதி வயிற்றின் முன்பக்கம் ஆகிய பகுதிகளில் சரமாரியாக கத்தியால் குத்தினர் இதில் முரளி சம்பவ  இடத்திலேயே மயங்கி விழுந்தார் அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் கொடுக்கப்பட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர் மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாலிபர் முரளி சிகிச்சையில் உள்ளார் இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஆஸ்டின் பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய நோயல் மற்றும் ராஜா வை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் இலங்கை அதிமுக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


    எமது செய்தியாளர் : நீதி பாண்டியன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad