• சற்று முன்

    நக்கீரன் கோபால் விடுதலை


    இன்று காலை சென்னை மீனம்பாக்கதில் வைத்து புலனாய்வு பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். சிந்திததிரிபேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். பின்னர் பகல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை முடித்து எழும்பூர் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். இவருக்காக இந்து ராம் வழக்கறிஞர் நக்கீரன் கோபால் கைது செல்லாது என்றும் 124 பிரிவை பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும் இதன் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொண்டால் பின் விளைவுகள் சந்திக்க வேண்டியிருக்கும். நிர்மலா தேவி செய்தியையும் ஆளுநரின் விசாரணையை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இதற்கு ஆளுநர் பணிக்கு குந்தம் விளைவிக்கமுடியாது என்று வாதத்தை முன் வைத்து நக்கீரன் கோபால் அவர்களை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க முடியாது என்று கூறி மாலை விடுதலை செய்யப்பட்டார். இவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உடன் இருந்தனர். 
    நீதி மன்றம் கருத்து சுதந்திரம் பக்கம் நின்றது என்றும் நீதித்துறைக்கும் அரசியல் கட்சி தலைவர்கள், ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார் நக்கீரன்  கோபால் .

    செய்தியாளர் : பொன் முகரியன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad