Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் கல்லுரிக்களுக்கிடையேயான தேர்தல் விழிப்புணர்வு போட்டி


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லூரி மாணவர் - மாணவியர்களிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், வாக்குபதிவு இயந்திரம் மற்றும்;  வாக்காளர் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் நாலாட்டின்புத்தூர் நேஷனல் பொறியியல் கல்லூரியில் வைத்து அனைத்து கல்லூரி மாணவ மாணவியர்களிடையே போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியில் நேஷனல் பொறியியல் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உண்ணாமலை பொறியியல் கல்லூரி மற்றும் ஜீ.வி.என் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 150 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் விஜயா சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    மேலும் நிகழ்ச்சியில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கோவில்பட்டி வட்டாட்சியர் பரமசிவன், தனித்துணை வட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், திரவியம், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் கோவிந்தராஜ்,தினகரன் மற்றும் நேஷனல் பொறியியல் கல்லூரி, இயக்குநர், முதல்வர்   மற்றும் பேராசியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad