Header Ads

  • சற்று முன்

    பாம்பு என்றால் படையே நடுங்கும் ஆனால் நாகப்பாம்பிடம் போதை தேடும் இளைஞர்கள்


    "மது போதை, கஞ்சா, அபின், ஹெராயின், ஓப்பியம் உள்ளிட்ட போதை மருந்துகளுக்கு இளைஞர்கள் அடிமையாகுவதை பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கருநாகப்பாம்புக் கடிவிஷத்துக்கு அடிமையாக பார்த்திருக்கிறோமா.
    ராஜிஸ்தானில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் தங்கள் நாக்கில் கொடிய விஷம் கொண்ட கருநாகப்பாம்பை கடிக்கவைத்து அந்த விஷத்தின் மூலம் போதை ஏற்றுக்கொள்கிறார்கள். இதைப் பார்த்த மருத்துவர்கள் இதுஒரு மருத்துவ அதிசயம் என்று வியக்கிறார்கள்.

    கருநாகப்பாம்பு ஒருமுறை தீண்டும் விஷத்தின் மூலம் 20 மனிதர்களைக் கொல்ல முடியும் அல்லது யானை ஒன்றைக் கொல்ல முடியும். ஆனால், இரு இளைஞர்களும் பாம்பை நாக்கில் கொத்தவைத்து விஷத்தை போதையாக்கி வருகிறார்கள்.


    இவர்கள் இருவரையும் சண்டிகாரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு மையும் ஆய்வு செய்ய அழைத்துள்ளது. இருஇளைஞர்கள் குறித்து முதல் கட்டமாக நடத்தப்பட்ட ஆய்வு குறித்து இந்தியன் ஜர்னல் ஆப் சைக்காலிஜக்கல் மெடிசன் என்ற மருத்துவ இதழில் கட்டுரையும் வெளியாகியுள்ளது.
    ஓப்பியம் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வாக பாம்பு விஷம் என்ற தலைப்பில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளது. இந்த கட்டுரையை டாக்டர்கள் அசீம் மேரா, டேபாஷிஸ் பாசு, சந்தீப் குரோவர் ஆகியோர் எழுதியுள்ளனர்.

    பாம்பு தீண்டினால் மனிதர்கள் உயிரிழந்துவிடும் சூழலில் இவர்கள் இருவரும் தொடர்ந்து பாம்பை தங்கள் நாக்கில் கொத்தவைத்து விஷத்தை உடலில் ஏற்றி உயிர்வாழ்கிறார்கள் என்பதை மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
    இது குறித்து டாக்டர் சந்தீப் குரோவர் கூறுகையில், மனிதர்களின் உயிரைக் கொல்லும் பாம்புவிஷம் இவர்களுக்கு எப்படி போதை மருந்தாகிறது என்பதை ஆய்வு செய்கிறோம். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad