Header Ads

  • சற்று முன்

    அதிகளவில் கடத்தப்படும் எரும்பு திண்ணி பல லட்சங்களை ஈட்டும் கடதல்கரர்கள்


    வனவிலங்குகள் தொடர்பாக உலக அளவில் நடைபெற்று வருகின்ற சட்டபூர்வமற்ற வர்த்தகம், பல விலங்குகளின் அழிவுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது.

    இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபடுவோர் பெறக்கூடிய லாபத்தை தொடர்ந்து கண்காணித்து வருவது இந்த வனவிலங்குகளை பாதுகாக்க உதவலாம். உணவு, செல்ல பிராணிகள், மருந்துகள் மற்றும் அணிகலன்களாக கூட இறந்த அல்லது வாழும் விலங்குகள் தொழில்துறை அளவில் விற்கப்படுகின்றன. இத்தகைய சட்டபூர்வமற்ற வத்தகம், மனித குரங்குகள் முதல் ஹார்ம்ல்ட் ஹார்ன்பில்ஸ் (அலகின் மீது கொம்பு போன்ற வளர்ச்சி உடைய பறவை வகை), பறவையினம் வரை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.

    ஆனால், எந்தவித விலங்குகளையும்விட எறும்புத்தின்னிதான் இந்த வர்த்தகத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வித்தியாசமான தோற்றமுடைய இந்த எறும்புத்தின்னி, அதனுடைய இறைச்சி மற்றும் செதில்களுக்காக சில நாடுகளில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது.உலக நாடுகளில் அதிகமாக கடத்தப்படும் பாலூட்டி இந்த எறும்புத்தின்னி என நம்பப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் எறும்புத்தின்னிகள் காடுகளில் இருந்து பிடிக்கப்பட்டு, வியட்நாமுக்கும், சீனாவுக்கும் கடத்தப்படுகின்றன. வழக்கமாக, யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் பாதிக்கப்படுவது மீதுதான் உலக நாடுகளின் கவனம் உள்ளது. பல நாடுகளில் இந்த விலங்குகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது.

    எடுத்துக்காட்டாக தான்சானியாவில் 2009ம் ஆண்டு ஒரு லட்சத்து 9 ஆயிரமாக இருந்த யானைகளின் எண்ணிக்கை 2014ம் ஆண்டு 43 ஆயிரத்திற்கு மேல் என 60 சதவீதம் சரிந்ததாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வர்த்தகத்தின் பின்னணி தூண்டுதலாக இருப்பது இதில் கிடைக்கும் லாபமே. தொடர் கண்காணிப்பில் பணப்பரிமாற்றம் கடத்தப்படுகின்ற இந்த விலங்குகளுக்காக பெருந்தொகை கைமாறுகிறது. ஊழல் அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் இணையம் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு இடையில் இந்தப் பண பரிமாற்றம் நடைபெறுகிறது.

    சட்டபூர்வமற்ற வனவிலங்குகளின் வர்த்தகத்தை தடுப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் இந்தப்பணப்புழக்கம் கண்டுக்கொள்ளப்படுவதில்லை.

    இந்த வாரம் லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்த வனவிலங்குகளின் சட்டபூர்வமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் குற்றவியல் வலையமைப்புகளை அகற்றுவதற்கு பண பரிமாற்றம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்படும். இவ்வாறு பண பரிமாற்றத்தை கண்காணிப்பது ஒருபுறம் இருக்க, விலங்குகளை கண்காணிக்கின்ற பாரம்பரிய அணுகுமுறையும் தொடரும். இதற்கு பெருமளவு புள்ளிவிவரங்கள் தேவை என்றாலும் விலங்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. துல்லியமாக கணக்கிட முடியாது என்றாலும், சட்டபூர்வமற்ற வனவிலங்குகள் வர்த்தகத்தில் ஓராண்டுக்கு 700 கோடி முதல் 2,300 கோடி டாலர் வரை பரிமாறப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பணத்தொகை தனிநபர்களுக்கு இடையில் பணமாக பரிமாறப்படுகிறது. ஆனால், பெருந்தொகை வங்கிகள் வழியாகவும் செலுத்துப்படுகின்றது.

    பாதுகாக்கப்படும்  உயிரினங்கள்
    இவ்வாறு நடைபெறும் சட்டப்பூர்வமற்ற வர்த்தக பண பரிமாற்றங்களை தடுப்பதற்கு சமீபத்தில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, 2017ம் ஆண்டு 1.3 டன் யானை தந்தம் பிடிப்பட்டதை தொடர்ந்து உகாண்டாவிலுள்ள 3 பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad