அச்சத்தில் பொது மக்கள் அலட்சியம் காட்டும் சின்ன கீரமங்கல மின்வாரிய அதிகாரிகள்
திருவாடானை தாலுகா திருவாடானை அருகே சின்ன கீரமங்கலத்தில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் 5க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதம் அடைந்து எப்ப வேண்டுமானாலும் கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. பொதுவாக மின் கம்பங்கள் பழுதானால் அதை மின்சார வாரியம் தான் சரி செய்ய வேண்டும்
ஆனால் அதை சரி செய்யும் அலுவலகத்திலேயே மிகவும் ஆபத்தான நிலையில் 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன இந்த மின் கம்பிகளின் வழியே உயர் மின்னழுத்தம் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த மின்கம்பங்களை அதிக அளவில் காற்றடித்தால் கீழே விழுந்து விடும் இதனால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
செய்தியாளர் : திருவாடானை - ஆனந்த் குமார்
கருத்துகள் இல்லை