Header Ads

  • சற்று முன்

    ராஜ விசுவாசம் குறித்து அவர் பேசுவது நியாமா - கூறுகிறார் டிடிவி தினகரன்


    தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்னை மீண்டும் சந்திக்க முயற்சித்ததை ஒப்புக் கொள்ள வைப்பேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்..

    "அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், ராஜ விசுவாசம் குறித்து அவர் பேசுவது நியாயமா? ஓ.பன்னீர்செல்வம் என்னைச் சந்திக்கக் கேட்டிருந்தும், நான் முதலில் அதற்கு மறுத்தேன். ஆனால், நடந்ததைச் சொல்ல வேண்டிய நிலைக்கு அவர் என்னைத் தள்ளியிருக்கிறார்.


    முன்னுக்குப் பின் முரணாகப் பேசி மக்களையும், கட்சித் தொண்டர்களையும் ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்ற முடியாது. கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக எங்களைக் குறை சொன்னவர், எதற்காக என்னைச் சந்திக்க வேண்டும்? துரோகச் சிந்தனை உள்ள அவர் ஏதாவது செய்து மீண்டும் முதல்வராக வேண்டுமென விரும்புகிறார். தி.மு.க.வையும் காங்கிரஸையும் எதிர்த்து அமைச்சர்கள் கண்டனக் கூட்டம் போட்டனர். அந்த கண்டனக் கூட்டத்திலும் அமைச்சர்கள் என்னைப் பற்றியே பேசினர்.

    மீண்டும் என்னைச் சந்திக்க விரும்புவதாக நண்பர் ஒருவர் மூலம் ஓ.பன்னீர்செல்வம் அழைத்ததால்தான், ஏற்கெனவே நடந்த சந்திப்புக் குறித்து வெளியே கூற வேண்டிய நிலை வந்தது. என்னை மீண்டும் சந்திக்கத் தூதுவிட்டது உண்மைதான். வேலுமணியும், தங்கமணியும் என்னை துணை முதல்வராக்க விரும்பினர். தினகரன் ஒரு பொருட்டல்ல என கூறும் அமைச்சர்கள், அனைத்து மேடைகளிலும் என்னை எதிர்த்துப் பேசுவது ஏன்? தர்மயுத்தம் என்ற பெயரில் தவறு செய்துவிட்டேன் என பன்னீர்செல்வம் கூறினார். முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்னை மீண்டும் சந்திக்க வேண்டும் என அவர் முயற்சி செய்கிறார்"

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad