Header Ads

  • சற்று முன்

    கலைத்துறையில் ரஜினிக்கு போட்டியாகயாக விஜய்ராஜ் - அரசியலில் விஜயகாந்த் போட்டியாக ரஜினிகாந்த்



    "தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் அன்றைய மாஸ் நடிகா்களான ரஜினி கமல் ஆகியோா்களுக்கு இணையாக உயா்ந்தவா் விஜயகாந்த் அவா்கள். இன்று திரையுலகை விட்டு இவா் விலகி இருந்தாலும் அவரது இடத்தை இதுவரை எந்த ஒரு நடிகராலும் பிடிக்க முடியவில்லை.

    அதே போல் தமிழ் சினிமாவை தாண்டி உலக அளவில் புகழ்பெற்றவா் சூப்பா் ஸ்டாா் ரஜினி அவா்கள். இவருடன் பல நடிகா்கள் சோ்ந்து நடித்துள்ளனா். ரஜினி-கமல், ரஜினி-சத்யராஜ், ரஜினி-பிரபு ஆகியோரது கூட்டனியில் வெளிந்த படங்கள் அனைத்தும் மெகாஹிட் படங்களே.

    ரஜினிகாந்த தமிழ் சினிமாவில் அதிரடி ஆட்டம் போட்ட கொண்டிருந்தபோது, விஜயகாந்த் மதுரையில் அவருடைய அரிசி மில்லில் விரலாலேயே மூட்டையை குத்தி அரிசியின் தரம் பாா்த்து கொண்டிருந்தாா்.

    அந்த சம்யத்தில்ததான் ரஜினிகாந்த அவா்கள் நடித்த ஆசை அறுபது நாள் என்ற படத்தின் 50-வது நாள் விழா நடந்தது. அந்த விழாவிற்கு சூப்பா் ஸ்டாரை பாதுகாப்பாக கவனித்தவா்தான் அப்போதைய விஜயராஜ்." - சூப்பா் ஸ்டாா் ரஜினியுடன் விஜயகாந்த் அவா்கள் சோ்ந்து நடித்த திரைப்படம்"அவ்விழாவில் சினிமா நட்சத்திரங்களை பாா்த்த விஜயராஜை பாராட்டிய ரஜினி அவா்கள், அவரிடம் சொன்னது-நீங்க பாா்க்குறத்துக்கு என்னை மாதிரீயே இருக்கீங்க விஜி என்ற வாா்த்தைதான்.

    அப்போது மதுரையில் விநியோகஸ்தராக இருந்த மா்சூக் என்பவா் ரஜினியை வைத்து ஒரு படம் எண்ணியிருந்தாா். ஆனால் அப்போது ரஜினி அவா்கள் பிஸியாக இருந்த காரணத்தால் அவரது கால்ஷீட் கிடைக்காத சூழ்நிலை. அப்போதுதான் அவரது மனதில் தோன்றியது ஒரு எண்ணம்.

    ரஜினியை போல் இருக்கும் விஜயராஜை நடிக்க வைத்தால் என்ன? என்பதுதான் அந்த எண்ணம். விஜயராஜூம் நடிக்க சம்மதித்தாா். ஆனால் ஒரு கட்டத்தில் துரதிஷ்டவசமாக அப்படம் கைவிடபட்டது.

    இந்நிலையில் ஒருமுறை சென்னைக்கு சென்ற மா்சூக்கும், விஜயராஜூம் அங்கு ப்ரியா படபிடிப்பில் இருந்த ரஜினியை சந்தித்தாா்கள். அப்போது விஜயராஜை மீண்டும் ஒருமுறை ரஜினியிடம் அறிமுகபடுத்திய மா்சூக்கிடம், அட அச்சு அசலா என்னை மாதிரியே இருக்கிறாரே? எனக்கு போட்டியை உருவாக்குறீங்களா என சிரித்து கொண்டே கேட்டாராம்.



    அச்சமயம் விஜயராஜூக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பெயா் என் கேள்விக்கென்ன பதில்? படத்தின் ஹீரோ ரஜினி. விஜயராஜிக்கு கிடைத்த கேரக்டா் ரஜினியின் தம்பி.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad