• சற்று முன்

    என்னை கொல்லாதே...... ஆசிரியர் - நீலம் மூன் இதன் முன் கதை (05.10.18)



    எதிரே வந்த ஆடோவில் ஏறி தப்பித்து விட்டான். நீலேஷ், கையில் கிடைத்ததை நழுவ விட்டோமே, ச்....சே என அங்கலாய்த்தான் காந்தன்..எத்தனை சாமர்த்தியம் பெண்ணு வீட்டுக்கு வந்து தகராறு பண்ற அளவுக்கு நம்மை கண்காணிக்கிறாங்க கடைசியா சொன்ன வார்த்தை  மாப்பிள்ளை உயிரோடு இருப்பானா .அப்படி என்றால் நான் செத்திடுவேனா  நீலேஷ் அச்சத்தில் பதறினான்.நண்பனின் கரத்தைப் பற்றி டேய் மாப்பிள்ளை கலங்காதேடா நான் எதுக்கு இருக்கேன் விட்டுடுவேனா தைரியமா இருடா ஆறுதல் அளித்தான். இவர்களின் உரையாடல் அறியாமல் எண்டரியான நபரை கண்டு வெறுத்தான்.     ஹலோ மிஸ்டர் நீலேஷ் சாலையில்என்ன  ரன்னிங் ரேஸ் யாரை பிடிக்க கடைசில ஐயா  பல்பு வாங்கிட்டிங்க போல நக்கலாக சிரித்தாள். அவளின் சிரிப்பு தங்களின் கையிலாகாத பேடிதனத்தை காட்டவும் காந்தன் ஹேய் யார் உன்னை கூப்பிட்டது ,தெருவுல போறவங்களுக்கு எல்லாருக்கும் இப்படித்தான்  சினத்தில் கத்தினான். நிலாவின் கண்களில் நீர் சுரந்தது. வந்து........  தப்பான  நேரத்தில் தேவையில்லாமல் உளறிட்டேன். சாரி...என்றாள்          நிலா மாலை மெரினாவில் சந்திக்கலாம். இப்போ நீ கிளம்பு என்று  அவளுக்கு மட்டும் கேட்குமாறு காதில் சொன்னான். ப்ளீஸ் நிலா எனக்காக கண்களால் கெஞ்சினான் நீலேஷ். மௌனமாக அவளும் கண்களினால் சரி என கிளம்பினாள்.  இருவர் நடத்தும் நாடகம் புரியாமல் அவளை பிடிக்கல மச்சான் துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட் நினைப்பு..எரிச்சல் அடைந்தான் காந்தன்  நண்பனின் மனம் புரிந்து அதற்கேற்ப தலை அசைத்தான்.  அன்று மாலை  மெரினாவில் நிலாவை சந்தித்தான். சாரி நிலா அவன் ரொம்ப பயந்து இருக்கான். உன்னையும் கஷ்டப் படுத்திட்டான்.ப்ளீஸ் ம்மா பரவாவில்ல விடுங்க. ஆன்டி வீட்டை பார்க்க அனுமதிக்க மாட்டாங்களா வருத்தமுடன் கேட்டாள்.    பொறு நிலா நாலாபுறமும் சாவுமணி அடிச்சா பாவம் காந்தன் என்ன செய்வான். எங்கே ஆரமித்து எப்படி முடியும் ஒண்ணுமே விளங்கல எக்கசக்க புதிர்கள் சிக்கல்மேலேசிக்கல்.ஆன்டி இறந்தது கவலை என்றால் மற்றோர் பக்கம் முகமறியாத விரோதிகள்.பழக்கமில்லாத எத்தர்கள். கொடுக்கும் குடைச்சல்கள்  இதிலிருந்து எவ்வாறு  மீண்டு வருவது கடவுளுக்குகே வெளிச்சம்.என  ஆதங்கப்பட்டான்   நீலேஷ்.   அடடாட என்ன பாஸ் இளமையில் முதுமையா இப்படி ஒப்பாரி வைக்கிறீங்க.போச்சு எல்லா கற்பனையும் தவிடு பொடியாக்கி  போச்சு என்று சிறுகுழந்தை போல இமைகள் படபடத்தாள். அவளின் நடிப்பில் ஒரு நிமிடம் கிறுகிறுத்தவன். அப்படி என்ன கற்பனையோடு  வந்தே உன் சந்தோஷம் கேட்டு போச்சுடா  ஐயா மெரினாவில் சந்திக்கலாம் என்றதும் கற்பனை குதிரைகள்தாறு மாறு தறி கெட்டு ஓடிச்சு அதை அடக்கி கட்டுப்  படுத்திட்டு  வந்தா  எல்லாம் ப்பூஸ்...புலம்பி அழுது வடியிரீங்க சகிக்கல தேவுடா எனதோள்களைக்   குலுக்கினாள். அவளையே கூர்ந்து கவனித்தவன். பளபளபான கன்னம்  வழுவழுப்பான தேகம். பட்டாம்பூச்சி சிறகடிக்கும் இமைகள்.ஆழ்த்துளைக் கிணறு போன்று உள்ளத்தை சிக்க வைத்து மேலே எழுந்து விடாத கருவண்டு கண்கள் விவசாய படிகட்டு போன்ற  அடுக் அடுக்கான கருமையான படிப்படியான நீண்டகூந்தல்.  கூர்மையான மூக்கு மாதுளைநிற அதரம். மென்மையான வெண்மையான கழுத்து.அதற்கு கீழ்......... அன்று கண்டெயினர் மோத நெருங்க மயங்கி நிலா நெஞ்சில் சாய்ந்தது நினைவுக்கு கண் முன் தோன்றியதும் உடலில் புதுப்புனல்   ஊற்றெடுத்து பொங்கி இராசாயன மாற்றம் நாடி நரம்பில்  புகுந்து உடலெங்கும் பரவி ஸ்வர  ராகம்  மீட்டி தேன் சிந்த இன்பம்  தந்தது.. நிலா உன்னிடம் மாட்டிக்கிச்சு என் மனசு என்று .....வாய் திறந்து சொல்ல  நிமிர்ந்து விழியோடு கலக்க ..நிலா.....நிலா.....அழைத்த நேரம் ஆன்டியை பற்றி ரகசியம் கூறிய குண்டு கட்டையான கிழவன்   தப்பித்தவன் .தென்பட்டான்.நிலா அங்கே  புடிபிடி ஓடுறான் என இருவரும் ஒடினர்.பட்டென பற்றினான். நீலேஷ் ஆனால்.....


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad