Header Ads

  • சற்று முன்

    சென்னை ஆவடியில் கல்லூரி மாணவர்கள் மோதல் - சரமாரியாக வெட்டு !


    ஆவடி, கோவர்த்தனகிரியை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் முகேஷ், 21. இவர் மாநிலக் கல்லூரியில் விலங்கியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.  நேற்றையதினம் கல்லூரிக்கு சென்று வீடு திரும்பும்போது, ஆவடி பேருந்து நிலையத்தில்  மாலை 4:00 மணி அளவில் பேருந்துக்காக காத்திருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த, சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான லோகேஷ் உட்பட சிலர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முகேஷை விரட்டி உள்ளனர். அங்கிருந்து தப்பி ஓடிய முகேசை ஒ.சி.௭ப்., திடலில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி உள்ளனர். இதைப்பார்த்த ஆட்டோ ஓட்டுனர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வருவதை பார்த்த கல்லூரி மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    தலை, கைகளில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த முகேஷை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் முகேஷுக்கு தலையில் 11 தையல்கள் போடப்பட்டுள்ளன. போலீஸ் விசாரணையில் முகேஷ் மீது ஏற்கனவே ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் இவர் மீது பேருந்து கண்ணாடி உடைத்தது என பல்வேறு வழக்கு உள்ளது தெரியவந்தது



    இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் ஆய்வாளர் ஜெய் கிரிஷ்  நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதலால் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.தப்பி ஓடிய கல்லூரி மாணவர்களை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் குற்றத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களான கரலப்பாக்கம் சேர்ந்த யோகேஸ்வரன் மணிகண்டன் மற்றும் விஷால்  ஆகிய மூன்று பேர் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்

    எமது செய்தியாளர் - கதிரவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad