Header Ads

  • சற்று முன்

    கல்லுரி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ரயில்வே கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு



    திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தென்னக ரெயில்வே மற்றும் ஜெயா கல்லூரி இணைந்து பாதுகாப்பான ரயில் பயணம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி நிறுவனர் கனகராஜ் அவர்களின்  தலைமையில் நடைபெற்றது .


    இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ரயில்வே ADGP சைலேந்தர் பாபு அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு,ரயிலில் எவ்வாறு பாதுகாப்புடன் பயணம் செய்யவேண்டும்,செல்போனில் பேசிக்கொண்டு பயணம் செய்ய கூடாது, ரயில் படியில் மற்றும் கம்பிகளில் தொங்கிக் கொண்டு செல்ல கூடாது,ரயில் பாதையை கடப்பதற்கு ரயில்வே கேட்  திறக்கப்பட்டால் மட்டுமே கடக்கவேண்டும்  என்றும்,மாணவர்கள் நம்முடைய எதிர்காலத்தை எவ்விதம் திட்டமிடுதல் வேண்டும்,இந்த சமூகத்தில் மாணவ மாணவிகளின் பங்கு மற்றும் அவர்கள் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி  எடுத்துரைக்கப்பட்டது.



    இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது மாணவர்களிடையே உரையாற்றிய சைலேந்திரபாபு அவர்கள். வேறு எந்த மனிதனால் செய்யமுடியும் என்றால் என்னால் செய்ய முடியும், வேறு யாராலும் செய்யமுடியாது என்றால் அது என்னால் மட்டுமே செய்ய முடியும் என்பதே ஜப்பானியர்களின் கொள்கையாகும் என்றும் உங்களிடம் கல்வியும், அதிகாரமும்,பணமும் இருந்தால் மட்டுமே உங்களுக்கான மதிப்பு கிடைக்கும் ,எவ்வளவு உயர்வான இடத்தில் இருக்கீர்களோ அதற்கான மதிப்பு கிடைக்கும். ஆதலால் படித்து உயர்வான இடத்தை அடைய முயற்சி செய்யுங்கள் என்றும் கூறினார்.

    மேலும் புத்தியை கூர்மை படுத்துங்கள்,  ஆங்கிலத்தை தொடர்ந்து நல்லபடியாக பேச முயற்சி செய்யுங்கள் ,ரெயிலில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.



    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் 
    ரெயிலில் பயணம் செய்யும் மாணவர்கள் மோதலில் ஈடுப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும், ரெயிலில் பயணம் செய்யும்  பொதுமக்களின் பாதுகாப்புகாப்புக்கு ரெயில்வே காவலர்களின்  எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.  இந்நிகழ்ச்சியில் பட்டாபிராம்  உதவி ஆணையர் கண்ணன், ரெயில்வே காவல் ஆய்வாளர் பச்சையம்மாள், ஆனந்தன் உள்ளீட்ட ஏராளமான அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad