அமைச்சரவை கூட்டத்தில் கசமுசா...
அமைச்சரவை கூட்டத்தில் 7 பேர் விடுதலை குறித்து பேசி முடிவுக்கு வந்த நிலையில் அதிகாரிகள் சென்ற பிறகு தற்போது ஆட்சி ஆரோக்கியமாக இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு எந்த அமைச்சர்களும் செவிசாய்க்கவில்லை. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு அதிகரித்து வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி மத்தியில் அழுத்தம் தருவதாக முதல்வர் பழனிச்சாமி கூறினார். எதிர் கட்சிகளும் ஆதாரங்களுடன் நிருபிக்கின்றன. அமைச்சர் விஜயபாஸ்கர், வேல்மணி, சம்பத் மீது புகார் கொடுக்க தான் செய்வார்கள் அதற்காக அவர்களை பதவியில் இருந்து நீக்கிவிட முடியுமா ? அப்படி என்றால் முதலில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் அமைச்சர் வேலுமணி அமைச்சர் கூட்டத்திற்கு வந்தேன். குற்றவாளியை கூண்டில் விசாரிப்பது போல் விசாரணை செய்கீர்கள் என்று கூறி கூட்டத்தை விட்டு கிளம்பி சென்றுவிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கருத்துகள் இல்லை