Header Ads

  • சற்று முன்

    பள்ளி மாணவிகளை கேலி செய்யும் பொருக்கிகள் மீது நடவடிக்கை எடுக்குமா காவல் துறை

    தமிழ் நாட்டில் கல்விக்காக பல திட்டங்களை கொண்டுவந்தவர் முன்னால் முதல்வர் காமராஜர் அவர் காலத்தில் தான் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில மத்திய உணவு என்ற திட்டத்தை கொண்டு வந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டவர் காமராஜர். அதன் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அந்த திட்டத்தை விரிவுபடுத்தி இன்னும் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர். அதன் பின்னர்  முன்னாள் முதல்வர் கருணாநிதி பள்ளி மாணவர்களுக்கு முட்டை மற்றும் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார். முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்னும் பல்வேறு திட்டங்களை அறிமுகம் படுத்தி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி பயில பல திட்டங்களை கொண்டுவந்தார். இப்படி ஏழை எளிய மாணவர்கள் மற்றும் கிராம புற மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசுகள் மாணவர்களின் நலனில் தனி கவனம் செலுத்தி வருகிறது. இப்படி இருக்க இன்று கல்லூரி மற்றும் பள்ளி படிக்கும் பெண் குழந்தைகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரும்பேரி, சிம்மணபுதூர், பேராம்பட்டு,விஷமங்களம் போன்ற பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு வேலை வெட்டிக்கு போகமால் இருக்கும் போக்கிரி வாலிபர்கள் தினமும் தோறும் காலை 8மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் இடம் தகாத முறையில் பேசுவது மற்றும் சைக்கிள் செல்லும் மாணவிகளின் வாகனங்களை வழி மறித்து தகாத வகையில் நடத்துக்கொள்ளகின்றனர். கடந்த ஒரு மாதமாக திருப்பத்தூர் அடுத்த குரும்பேரியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சிம்மணபுதூர் பகுதிகளில் இருந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயில வருகின்றனர். அப்படி வரும் மாணவிகளிடம் குரும்பேரி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் காலையில் 8 மணியளவில் சிம்மணபுதூர்- குரும்பேரி செல்லும் சாலை கார்த்திகேயன் நிலம் அருகில் உள்ள சாலை தடுப்பு சுவர்களில் அமர்ந்து கொண்டு 6முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவிகளிடம் தகாத முறையில் பேசுவது மற்றும் சைக்கிள் வரும் மாணவிகளிடம் பெயர் சொல்லி அழைப்பது மற்றும் வழி மறித்து தகாத முறையில் பாலியல் ரீதியான ஆபாச வார்த்தைகளால் தீட்டுவது இப்படி தினம் தோறும் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் ‌மாணவிகள் நாங்கள் இனி பள்ளி கூட்டம் செல்ல மறுக்கின்றனர். இன்று பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடைபெறுகிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பெற்றோர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வேலூர் மாவட்டத்திற்கு புதிதாக வந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்யா அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளையும் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த பள்ளி மாணவிகளின் கல்வி கனவை நிறைவேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்யா அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை ஆகும். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad