Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே கழுகுமலையில் காசநோயில்லா சிறப்பு முகாம்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் தனலெட்சுமி தீப்பெட்டி தொழிற்சாலையில் திருத்தியமைக்கபட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம் கடம்பூர் காசநோய் அலகின் சார்பாக காசநோயில்லா சிறப்பு முகாம் நடைபெற்றது. இம் முகாமிற்கு கழுகுமலை சுகாதார ஆய்வாளர் அமல்ராஜ் தலைமை வகித்தார்.காசநோய் அறிகுறிகள் பற்றியும், நோய் பரவும் விதம் போன்றவைகளை நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் ஞானசேகர் எடுத்து கூறினார்.  



    மேலும் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன்  பேசுகையில் சர்க்கரை நோயாளிகள் மிக விரைவில் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர் அதாவது 80% சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் வர வாய்ப்புள்ளது என்றும் தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் , காசநோய் கண்டறியும் விதம் பற்றியும் சிகிச்சை முறைகள் பற்றியும் பேசினார்.காசநோயை 2025க்குள் ஒழிக்க வேண்டும் என்றும் கூறினார்.நிகழ்ச்சி முடிவில் காசநோய் உறுதிமொழி எடுக்கப்பட்டது முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் நன்றி கூறினார்.

    எமது நிருபர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad