Header Ads

  • சற்று முன்

    அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை


    கோவில்பட்டி மந்தித்தோப்பு கணேஷ் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது மந்தித்தோப்பு ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கணேஷ் நகர் நடுப்பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும் வாறுகால் வசதி சாலை வசதி தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும்செய்யப்படவில்லை எனவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அட்டை கேட்டு விண்ணப்பித்தார் பெண்களுக்கு முறையாக அட்டை வழங்கவில்லை எனவும் கூறி அப்பகுதி பெண்கள் பகத்சிங் மன்றம் சார்பாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்தின்போது அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோ~ங்கள் எழுப்பினர் பின்னர் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவினை வட்டார வளர்ச்சி அலுவலர் உதவியாளரிடம் வழங்கினார்கள். பின்னர் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர் அப்பகுதி பெண்கள். வாக்குவாதத்தைத் தொடர்ந்து மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர்

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad