• சற்று முன்

    4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியினை அமைச்சர் துவங்கி வைத்தார்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பரபுரம் முதல் குருமலை வரையிலான 7.7. கி.மீ தொலைவிலான சாலைபணிகள் ரூ. 2கோடியே 44 லட்சம் மதிப்பில் தொடங்கப்படவுள்ளது. இதேபோன்று கடம்பூர் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் 2018 மற்றும் 19 ஆண்டிற்கான சட்டமன்ற வளர்ச்சி நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியினை துவங்க விழாவும் நடைபெற்றது. இதற்கான தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். 



    இதனை  தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றி மத்தியரசு கவனத்திற்கு எடுத்து சென்றவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மத்தியரசு மறுத்த போதும், உச்சநீதிமன்றம் சென்று 7 தமிழகளின் விடுதலைக்காக முனைப்புடன் செயலாற்றினார். தொடர்ச்சியாக அவரது வழியில் செயல்படும் இந்த அரசு உறுதியாக இருந்த காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக 7 பேரின் விடுதலைக்கு வேண்டிய அனைத்தையும் அரசு செய்யும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும், சி.பி.ஐ. பல்வேறு வழக்குகளை விசாரித்து வருகிறது. பல்வேறு நிலைகளில் பொறுப்புகளில் இருப்பவர்கள் மீது விசாரணையில் இருந்து யாரூம்  ராஜினமா செய்யவில்லை, ஊழல்க்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான், குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக  அமைச்சர் வழக்கிற்கு ஒத்துழைப்பு தருகிறார், 

    அரசும் அந்த விசாரணையில் குறுக்கீடு செய்யவில்லை, விசாரணை தான் நடைபெற்று வருகிறது அமைச்சர் பதவி விலக தேவையில்லை, திமுக எங்களுக்கு எதிர்கட்சி இல்லை, எதிரி கட்சி தான், மு.க.ஸ்டாலின் முதலில் அவருடை சகோதர சண்டையை பார்த்து கொள்ளட்டும் என்றார்.


    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு அரசு உறுதுணையாக இருக்கும், குட்கா ஊழல் வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் இருக்கிறது, அதனால் அமைச்சர் பதவி விலக தேவை இல்லை என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சிதம்பரத்தில் சாலைபணிகளை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad