பயோமெட்ரிக் கணக்கெடுப்பு கூட்டத்தில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் பொதுப்பணி துறை அதிகாரிகள் தலைதெறிக்க ஓட்டம்
சென்னை கொரட்டூர் ஏரியின் அருகே உள்ள முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், கங்கை நகர்,எஸ்எஸ் நகர்,மேனம்பேடு போன்ற பகுதிகள் சர்வே எண் 813 ல் உள்ளது.இதிலுள்ள 589 வீடுகள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் வருவதாக கூறப்படுகிறது. இதனை அகற்ற முடிவு செய்து,அம்பத்தூர் வருவாய் துறையினர் அந்த பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தனர்.எனினும் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த அதிகாரிகள் அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பொதுப்பணி துறை அதிகாரி பாபு அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.முன்னெச்சரிக்கையாக அங்கு 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய அரசு கஷ்டப்பட்டு கட்டிய வீட்டில் 30 ஆண்டுகளாக அரசின் நலத்திட்டங்களை பெற்று வாழ்ந்து வரும் எங்களின் வாழ்வாதாரத்தை கெடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி பயோ மெட்ரிக் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுப்பணி துறை அதிகாரிகள் வெளியேறி சென்றனர்.வட்டாசியரும் அரசு அதிகாரிகள் வராத நிலையில் பொதுப்பணி துறை அதிகாரிகளும் வெளியேறிய நிலையில் செய்வதறியாத பொதுமக்கள் தனியார் மண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த காவல் பொதுமக்களை எச்சரித்து அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த பகுதியில் இருந்து தங்களை வெளியேற்றினால் பிள்ளைகளின் படிப்பு மற்றும் தங்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகும் எனவே இறந்தாலும் இங்கே தான் இறப்போம் ஒரு போதும் தங்கள் வீடுகளை இடிக்க விடமாட்டோம் என கண்ணீர் மல்க எச்சரித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை