Header Ads

  • சற்று முன்

    வெளிச்சத்திற்கு வந்த அலையன்ஸ் கட்டுமான நிறுவனத்தின் தில்லாலங்கடி - கொதித்து எழுந்த குடியிருப்பு வாசிகள்


    கொரட்டூர் அருகே அலையன்ஸ் கட்டுமான நிருவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் சுமார் 2500 குடியிருப்புகள் உள்ளது. சதுர அடி 6000 என்ற அடிப்படை விலையில் ஐந்து வருடங்களுக்கு முன்பே முழு தொகையும் பெற்றுகொண்ட நிவையில் அடுக்குமாடி கட்டிடத்தை ஒப்படைக்கும் பொழுது ஏற்கனவே உறுதியளித்த நீச்சல்குளம்,முறையான பராமரிப்பு, குழாய் எரிவாயு,மொபைல் சிக்கனல் சரியான பாதுகாப்பு,உரிமையாளர்களுக்கான பிரத்யேக வசதிகள்  போன்ற வசதிகளை நிறைவேற்றவில்லை என்றும் இதனை பற்றி அலையன்ஸ் நிருவனத்திடம் வீட்டின் உரிமையாளர்கள் கேட்கும் பொழுது குண்டர்களை வைத்தும், காவல்துறையை வைத்து மிரட்டி வந்துள்ளனர்.



    இந்நிலையில் அலையன்ஸ் குடியிருப்பில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் போஸ்ரா என்ற அமைப்பும் சேர்ந்து இன்று காலை கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 



    இதுப்பற்றி குடியிருப்புவாசிகள் பேசும் பொழுது விளம்பரங்களை பார்த்து  பல லட்சங்கள் கொடுத்து வாங்கிவிட்டதாகவும்  அங்கு சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான சூழ்நிலை இல்லை என்றும் குடியிருப்புகளை வாங்கும் பொழுது செய்து தருவதாக கூறிய வசதிகளை செய்து தரவில்லை என்றும் விளம்பரங்களை நம்பி ஏமாந்துவிட்டதாகவும் கூறினர்.

    எமது செய்தியாளர் : கதிரவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad