• சற்று முன்

    பாசிச ஆட்சியின் தன்மைதான் மத்தியில் உள்ளது இங்கும் உள்ளது - ஐயா நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் பேட்டி



    வெளிநாட்டுக்கு அனுப்பும் பெட்ரோல் ,டீசல் பாதி விலைக்கும், மக்களுக்கு அதிக விலைக்கு விற்க்கும் செயலானது மத்திய அரசின் கொடூரமான செயல் - மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு 

    அம்பத்தூரில் பேட்டி விவசாயிகள் சங்கம் சார்பில் அம்பத்தூரில் நடைபெற்ற தொடர் உண்ணாநோன்பு போராட்டத்தில் கலந்துக்கொண்டு வாழ்த்தியதற்காக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  இரா.நல்லகண்ணு அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்கின் சம்மந்தமாக அம்பத்தூர் நீதிமன்றம் வந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் சரியான முறையில் அனுமதி பெற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்ற காரணத்தால் கடந்த ஒரு வருட காலமாக நீதி  மன்றதிற்க்கு அழைகழிக்கப்படுகிறோம்.


    பெட்ரோல் டீசல் விலை உயர்வானது அரசின் பின்னடைவாகவும், அரசின் தவறும் கூடவும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. வெளிநாட்டுக்கு அனுப்பும் பெட்ரோல் ,டீசல் பாதி விலைக்கும் மக்களுக்கு அதிக விலைக்கு விற்க்கும் செயலானது மத்திய அரசின் கொடூரமான செயல் என்று தெரிவித்தார்.

    நீதி மன்றத்தையும், காவல்துறையும் கேவலமாக பேசிய எச்.ராஜா மீது நீதிமன்றத்திற்க்கும் கோபம் வரவில்லை, காவல் துறையினருக்கும் கோபம் வரவில்லை , தமிழ்நாட்டை ஆளும்கட்சிக்கும் கோபம் வரவில்லை ஆனால் சாதாரணமாக பேசிய மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

    எதிர்கட்சிகளின் பேச்சு சுதந்திரம் ,எழுத்து சுதந்திரம்,  எந்த கருத்தும்  சொல்லகூடாது என்ற பாசிச ஆட்சியின் தன்மைதான் மத்தியில் உள்ளது இங்கேயும்   உள்ளது . வளர்மதி,திருமுருகன் காந்தி, கௌதமன் போன்றோர் மீது வழக்கு பதிவு செய்யும் அரசு  தமிழக அரசை பற்றி விமர்சிக்கும் மத்தியில் ஆளுபவர்கள் கூறுகிறார்கள் ஆனால் கைது செய்ய இந்த ஆட்சியாளர்கள் தயாராக இல்லை தயங்கி கொண்டு இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.


    எமது செய்தியாளர் : கதிரவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad