• சற்று முன்

    மகாபாரத கதையில் நடிகர் பிரபாஸுக்கு என்ன ரோல் தெரியுமா?



    மும்பை: பல கோடி ரூபாய் செலவில் உருவாகவிருக்கும் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட புராணப்படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் அர்ஜூனன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இயக்குநர் ராஜ மௌலி தயாரித்து வெளியான பாகுபலி வெற்றியைக் கண்ட பிறகு, எல்லாத் திரையுலகினரும் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கதையை எடுக்க ஆர்வம் கட்டி வருகின்றனர்.


    அதே போல் பாகுபலி வெற்றிக்குப் பிறகு பல மொழிகளில் பல புராணக்கதைகள் படமாகி, வெற்றியும் அடைந்தது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் இந்தியில் நடிகை தீபிகா படுகோன் நடித்த பத்மாவத் படமும் வெற்றியடைந்ததது. மேலும் அதே இந்தி மொழியில் ஜான்சிராணி லட்சுமி பாய் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் தமிழ் பெண் சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சைரா என்ற வரலாற்று படம் மிக பிரமாண்டமாக தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நமக்குக் கிடைத்த செய்தியில் பல கோடி ரூபாய் செலவில் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மிகப் பிரமாண்டமான வரலாற்றுப் படம் உருவாகப்போவதாகவும், அதில் எல்லா மொழிகளின் நட்சத்திரங்கள் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்போது அதே படத்தை பற்றி வேறு ஒரு தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. அதன்படி, அந்த மகாபாரத கதையில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் அர்ஜூனன் வேடத்தில் நடிக்கப்போவதாகவும், அதே படத்தில் கிருஷ்ணர் வேடத்திற்கு இந்தி நடிகர் அமீர் கானிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறியுள்ளனர். மேலும் இந்தப் படம் எல்லா மொழிகளிலும் வெளியாகும் என்பதால், எல்லா மொழியில் உள்ள நடிகர்களையும் இந்தப் படத்தில் பயன்படுத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad