Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே ரூ.3லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் தேக்க தொட்டி திறப்பு


    கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை கே.துரைச்சாமிபுரத்தில் உள்ள வெள்ளாட்டு ஊரணியில் இருந்து பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3லட்சம் மதிப்பில் போர் மூலமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தார். கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பரமசிவம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ கலந்து கொண்டு புதிய குடிநீர் தேக்க தொட்டியை திறந்து குடிநீர் விநியோகத்தினை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், கழுகுமலை முன்னாள் நகர செயலாளா் மாாியப்பன், கோவில்பட்டி நகர செயலாளா் விஜயபாண்டின், இனாம்மணியாச்சி ஊராட்சி செயலாளா் ரமேஷ், துறையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுவங்கி தலைவா் கணேசபாண்டியன் , இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவா் மகேஸ்குமாா், ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் வண்டனம் கருப்பசாமி ,அதிமுக நிா்வாகிகள் ராமசந்திரன், பாலமுருகன், மாாியப்பன், காமராஜ், ஜெமினி(எ) அருணாச்சலசாமி , அல்லித்துரை, சௌந்தா்ராஜன், செல்லையா, பழனிக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad