• சற்று முன்

    கோவில்பட்டியில் கண்தானத்தினை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி – 2000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி கோவில்பட்டி கண்தானம் இயக்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 2000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கண்தானத்தினை வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும், அதனைப்பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமூக ஆர்வலர்கள் கோவில்பட்டி கண்தான இயக்கம் என்ற அமைப்பினை ஏற்படுத்தி கடந்த ஒன்றை வருடங்களாக கண்தான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மட்டுமின்றி, தற்போது வரை 98 நபர்களிடம் கண்தானம் பெற்று, பயனாளிக்கு வழங்கி சேவை செய்து வருகின்றனர். மேலும் மக்களிடையே கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், தானம் பற்றிய தவறான கருத்துக்கள் மற்றும் மூட நம்பிக்கையை தகர்க்க வேண்டும் என்பதினை கருத்தில் கோவில்பட்டி கண்தான இயக்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு விழிப்புணர்வு பேரணியை கோட்டாட்சியர் விஜயா கொடிசையத்து தொடங்கி வைத்தார். பேரணி மெயின்ரோடு, மார்க்கெட் ரோடு, புதுரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக சென்று காந்தி மைதானத்தில் நிறைவு பெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பேரணியில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு பாதைகளுடன் கலந்து கொண்டனர். மாணவர்களும் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பொது மக்களுக்கு எளிதில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவது மட்டுமின்றி, கண்தானம் பற்றிய ஐயப்படுகளும் நீங்குவது மட்டுமின்றி, மக்களும் ஆர்வமுடன் தானாக வந்து கண்தானம் வழங்க வேண்டும் என்பது தான் இந்த விழிப்புணர்வு பேரணியின் நோக்கம் என பேரணி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad