முன்னறிவிப்பின்றி பள்ளி கட்டிடத்தை இடிக்கப்பட்டதால் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்......
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த ஞான மங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் பழமையானதை தொடர்ந்து புதிய கட்டிடம் அமைக்க அரசு பரிந்துரையின் பேரில் பள்ளி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் அமைக்க அதிகாரிகள் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் பள்ளி கட்டிடத்தை முற்றிலும் தரைமட்டமாக இடிக்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் தற்போது 30 மாணவ - மாணவிகள் படித்து வரும் நிலையில் முன்னறிவிப்பின்றி பள்ளி கட்டிடத்தை இடிக்கப்பட்டதால் மாணவர்கள் மாற்று இடம் இல்லாமல் தரையில் அமர்ந்து படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி பள்ளி கட்டிடம் இடித்து புதிய கட்டிடம் கட்ட முடிவெடுக்கப்பட்ட அதிகாரிகளை கண்டித்து அப்பகுதி மக்கள் ஞானமங்கலம் - திருத்தணி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலான மாணவர்கள் ஞனமங்கலம், அருந்ததி பாளையத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் படிப்பதால் தங்களது பகுதியில் பள்ளியை அமைத்து தரவேண்டும் எனவும் தற்காலிக கட்டிடம் ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் வட்டாட்சியர் பாபு மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை