Header Ads

  • சற்று முன்

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு பெற்ற நரி குறவர் இன மக்கள்


    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக 10 ஆயிரத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய நரிக்
     குறவர்களுக்கு பாராட்டு



    கேரளாவில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால்    பெரும்பாலான வீடுகள் இடிந்தும், சேதமடைந்தும் போனது. இதனால்  ஆயிரக்கணக்கானோர் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதையடுத்து பல ஆயிரம் ரூபாயை மத்திய அரசிடமிருந்து கேரள அரசு நிவாரணம் கேட்டுள்ளது.  இந்நிலையில் கேரவாளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்திலிருந்து பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும்  மாநிலம் முழுவதிலுமிருந்தும், அதே போல் வெளி நாடுகளிலிருந்து ஏராளமானோர் நிவாரணத் தொகையை வழங்கி வருகின்றனர்.  இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் பகுதியில்  நரிக்குறவர் இனத்து மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  அவர்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக வழங்க வேண்டும்  என்பதற்காக நிதியை திரட்டி 10 ஆயிரம் ரூபாயை இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அவர்கள் வழங்கினர்.  

    உதவி செய்யும் மனப்பான்மை தங்களிடமும் உள்ளது என்பதை நிரூபித்த நரிக்குறவ மக்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

    செய்தியாளர்  ஆவடி - போஜராஜன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad