திருப்பத்தூர் அருகே தனியார் செட்டப் பாக்ஸ் பொறுத்துவதை கண்டித்து அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சாலை மறியலில் ஈடுப்பட முயற்சி போலிசார் தடுத்து நிறுத்தம்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு, சிம்மணபுதூர், விசமங்களம், குரும்பேரி ஆகிய பஞ்சாயத்துக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராம பகுதிகளுக்கு இதுவரை அரசு கேபிள் மூலம் அனாலாக் முறையிலும் அரசு செட்டப் பாக்ஸிலும் அப்பகுதி ஆப்ரேட்டர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தனியார் நிறுவனமான SCV செட்டப் பாக்ஸ் போடுவதற்காக திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கேபிள் பொறுத்தும் பணியை தொடர்ந்து செய்து வருகின்றார். இதனை அறிந்த அப்பகுதி கேபிள் ஆப்ரேட்டர்கள் இதனை உடனடியாக தடுத்த நிறுத்த கோரி திருப்பத்தூர் - சிங்கரப்பேட்டை செல்லும் சாலை வெங்களாபுரத்தில் தீடீரென சாலை மறியலில் ஈடுப்பட முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலிசார் சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற ஆப்ரேட்டர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் வெங்களாபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
கருத்துகள் இல்லை