Header Ads

  • சற்று முன்

    காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.


    மர அறுவை இயந்திரம் வாங்க  33 ஆயிரம் லஞ்சம் பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். 

    காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கட்டளையை சேர்ந்தவர் சுனில்குமார் இவர் மானிய விலையில் மர அறுவை இயந்திரம் வாங்க காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையத்தை அனுகியுள்ளார்.அங்கு மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர்  அருள் இயந்திரம் வழங்க 33 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.இதனை சுனில்குமார் சென்னை லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்தார்.இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி ரசாயனம் தடவிய 33 ஆயிரம் பணத்தை  இன்று அதிகாலை அம்பத்தூரில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மைய   உதவி இயக்குனர் அருள்  வீட்டின்  அருகே கொடுக்கும் போது  லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினர் கைது செய்தனர். அம்பத்தூர் காவல் உதவி மைய அலுவலகத்தில் வைத்து  தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்.நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

    watch the nms today youtube

    செய்தியாளர் : சென்னை - கதிரவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad