உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை...
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிற உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
2015-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.. 2வது மாநாடு, வரும் ஜனவரி 23 மற்றும் 24 -ஆம் தேதிகளில் நடத்த ஏற்கனவே 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ள வேண்டியவை குறித்து ஆலோசனைநடைபெற்றது.
கருத்துகள் இல்லை