Header Ads

  • சற்று முன்

    உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினீத் சரண், கே.எம்.ஜோசஃப் பதவி ஏற்றுக் கொண்டனர்


    இந்திரா பானர்ஜி, வினீத் சரண், கே.எம்.ஜோசஃப் ஆகிய மூவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வினீத் சரண், உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.எம்.ஜோசஃப் ஆகிய மூவரையும் கொலீஜியம் பரிந்துரைகளின்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி, மூவருக்கும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கொலீஜியம் முதன் முதலில் பரிந்துரைத்த கே.எம்.ஜோசஃபின் பெயர், பதவியேற்பு வரிசையில் மூன்றாவதாக இடம்பெற்றது குறித்து சர்ச்சை எழுந்தது. இருப்பினும் குடியரசுத் தலைவர் உத்தரவில் இடம்பெற்றிருந்த வரிசையிலேயே பதவிப் பிரமாணம் நடைபெற்றது.

    இதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.  உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதி பதவியிடங்கள் உள்ள நிலையில், 6 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad