Header Ads

  • சற்று முன்

    பாரத ஸ்டேட் வங்கி முகவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்



    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஊதியம் முறையாக வழங்காத பாரத ஸ்டேட் வங்கி முகவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது மந்தித்தோப்பு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் வயது முதிர்ந்தோர் மற்றும் கையெழுத்துப் போட தெரியாதவர்களிடம் பாரத ஸ்டேட் வங்கியின் முகவராக செயல்படும் ரவீந்திரன் என்பவர் முறைகேடாக ஊதியங்களை பெறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. பலமுறை அதிகாரிகளிடம் புகார் அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது தங்களுக்கு வழங்க வேண்டிய கூலியை முறையாக வழங்க வேண்டும். மோசடியில் ஈடுபட்டு முறைகேடாக கையொப்பமிட்டு பெற்ற கூலியை உடனடியாக திருப்பி தரவேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு தனித்தனியே பாஸ்போர்ட் மற்றும் ஏடிஎம் கார்டு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட அலுவலக மேலாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அனைவருக்கும் உடனடியாக பாஸ்புக் மற்றும் ஏடிஎம் கார்டு வழங்குவதாகவும் உத்தரவிட்டார் இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


    செய்தியாளர் : கோவில்பட்டி  சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad