குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

கோவில்பட்டி அருகே திமுகவினர் மொட்டையடித்து, கருப்புசட்டை அணிந்து ஊர்வலம்


வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இல்லமால் நேற்று மாலை கருணாநிதி காலமானர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் எட்டயபுரம் 1வது வாா்டில் திமுக தலைவா் கருணாநிதி.திருவுருவபடத்திற்கு ஒன்றிய செயலாளா் நவநீதகண்ணன் தலைமையில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். 


தொடா்ந்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் தொண்டா்கள் தேவகிருபை, குருசெல்வம் , தனிசிலாஸ், சண்முகராஜ், லாா்டு துரை, சின்னப்பா், முத்து இருளப்பன், உடையாா் , மோட்சம் ஆகியோா் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினா். இதில் தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளா் லெனின் குமாா், நகர விவசாய அணி அமைப்பாளா் கோமதிசங்கர், நிா்வாகிகள் ஆனந்த கண்ணன் , மகேஸ் , அன்புபேகன் , கல்லடிவீரன் , 13 வது வாா்டு இளைஞரணி செயலாளா் முத்துகிருஷ்ணன்,  நகர மாணவா் அணி துணை செயலாளா் மயில்ராஜ் உள்படதிரளான திமுக நிா்வாகிகள் மற்றும் பாரதி மில் தொ.மு.ச நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.தொடர்ந்து  திமுகவினர் எட்டயபுரம் மெயின் பஜாாில் இருந்து கருப்புசட்டை அணிந்து மௌனமாக ஊர்வலம் சென்றனர். நகரின் முக்கிய பகுதிகளின் சென்று பஸ் நிலையம் முன்பு ஊர்வலம் முடிவுபெற்றது.இதில் திரளான திமுகவினர் கருப்புசட்டை அணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.