கோவில்பட்டி அருகே சூரங்குடி ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா சப்பரபவனி – திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோவில்பட்டி அருகேயுள்ள புகழ்பெற்ற சூரங்குடி ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழாவினை முன்னிட்டு கரகாட்டம், நையாண்டி மேளதளத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்ற அம்மன் சப்பரபவனி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சூரங்குடியில் ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ முனியசாமி திருக்கோவில் உள்ளது. சூரங்குடியை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த கோவில் குலதெய்வ கோவிலாக உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் ஆவணி திருவிழா புகழ்பெற்ற திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 21ந்தேதி கால்கோள் விழாவுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு அம்பாள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பரபவனி இன்று அதிகாலை 3மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அம்பாள் சின்ன சப்பரத்தில் அழைத்து வரும் நிகழ்ச்சியும், சிறப்பு அபிN~;க அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நையாண்டு மேளதளம் முழங்க, வாணவேடிக்கைகளுடன், கரகாட்டம் குழுவினர் முன்னே ஆட்டம்பட்டத்துடன் செல்ல பக்தர்கள் சப்பரத்தினை இழுத்து வந்தனர். அம்பாள் சப்பரம் சூரங்குடியின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை சென்றடைந்தது. இதில் 30 கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை