• சற்று முன்

    திருமங்கலம் அருகே அரசு பள்ளியில் மயங்கி விழுந்த 10ம் வகுப்பு மாணவி திடீர் சாவு


    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அச்சம்பட்டி மேல்நிலை பள்ளியில் 10 ம் வகுப்பு படித்த மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உசிலம்பட்டி அருகே போத்தம் பட்டியை சேர்ந்தவர் பிச்சைமணி. இவர் கடந்த 5 வருடத்திற்கு முன் இறந்து விட்டார். இவருடைய தாய் முத்துலெட்சுமி இவர் உசிலம்பட்டியில் உள்ள அரசு விடுதியில் வார்டனாக உள்ளார் இவர்களுடைய மகள் சுபிக்ஷா(15) அச்சம்பட்டி மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு படித்து வந்தார் இன்று மதியம் 2 30 மணி அளவில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார் பள்ளி மாணவிகள் மற்றும் தலைமையாசிரியர் உடனடியாக ஆட்டோ மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் திருமங்கலம் மருத்துவ மாணவியின் உடலை பரிசோதித்த போது இறந்து விட்டார் மேலும் மாணவியின் மர்ம சாவு குறித்து பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் மாணவியின் மரணம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    பள்ளி மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad