Header Ads

  • சற்று முன்

    கால் பந்து போட்டியில் அர்ஜென்டினாவை வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்தது


    ஸ்பெயினில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொடிஃப் (Cottif) கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.ஃபிஃபா 20 வயதுக்குட்பட்டவர்கள் கோப்பையில் ஆறு முறை சாம்பியனான அர்ஜென்டினாவும், இந்தியாவும் மோதியது. இந்த போட்டியில், ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் இந்தியாவின் தீபக் டாங்ரி முதல் கோலை அடித்தார்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 68-வது நிமிடத்தில் அன்வர் அலி இந்தியாவின் இரண்டாவது கோலை லாவகமாக அடித்து 2-0 என்று அணிக்கு வலுவான முன்னிலையை பெற்றுத் தந்தார்.தொடர்ந்து நடைபெற்ற போட்டியின் 72-வது நிமிடத்தில் அர்ஜென்டினா தனது முதல் கோலை அடித்தது.

    இறுதியில், அர்ஜென்டினாவை 2-1 என்று தோற்கடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad