Header Ads

  • சற்று முன்

    ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி


    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது டெல்லியில் உள்ளதேசிய பசுமை தீர்ப்பாயம். பல்வேறுகட்ட போராட்டங்களுக்கு பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
    இந்த வழக்கு ஆகஸ்டு 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
    ஜூலை 30ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கான தமிழக ஆணைக்கு இடைக்கால தடை வழங்க டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. 99 சதவீத கந்தக அமிலம், பாஸ்போரிக் அமிலம் மற்றும் பிற ரசாயனங்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்பட்டது என்று தூத்துக்குடியின் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்தார்.

    மேலும் ஆலையில் உள்ள தொட்டியின் அடிப்பகுதிகளில் உள்ள ரசாயனங்கள் மட்டுமே அகற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தொடங்கிய போராட்டம், கலவரம், போலிஸ் துப்பாக்கிச் சூடு அதில் 13 பேர் பலி என முடிந்தது. அதன்பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. நீர் மற்றும் காசு மாசடைவதால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ஆனால் இந்த போராட்டம் தவறான புரிதல்களால் ஊந்தப்பட்டது என வேதாந்தா நிறுவனம் தெரிவித்திருந்தது.

    தொடர்ந்து ஒரு வருடம் ஸ்டெர்லைட் ஆலை மூடியிருந்தால் 100 மில்லையன் டாலர்கள் வரை இழப்பை சந்திக்க நேரலாம் என வேதாந்தா நிறுவனம் நிறுவனத்தின் தலைவர் ஜூலை 20ஆம் தேதியன்று தெரிவித்திருந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad