வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 8.78 இலட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை, துணி உள்ளிட்ட பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பட்டது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு.கே.எ.செங்கோட்டையன் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கேரள மாநிலத்தில் மழைவெள்ள பாதிப்பிற்கான நிவாரணப்பொருட்கள் வழங்க விருப்பமுள்ளவர்களிடம் இருந்து பெற்ற அட்டை பெட்டிகளில் நன்றாக PACK செய்து தங்கள் பள்ளியின் பெயர் மற்றும் பொருட்களின் பட்டியல் ஆகியவற்றை அதன் மேல் எழுதி காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்டஅலுவலகத்தில் பெறப்பட்ட அனைத்து பொருட்களும் முதன்மைக்கல்வி அலுவலர் சா.மார்ஸ் அவர்கள் தலைமையில் முதமைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜன், கல்வி மாவட்ட அலுவலர்கள் கே.குணசேகரன், (அரக்கோணம்) என்.சாம்பசிவம்(திருப்பத்தூர்), கே.புலேந்திரன் (வேலூர்), ந.மணிவண்ணன்(இராணிப்பேட்டை), வீரமணி (வாணிம்பாடி) அனைவருக்கும் கல்வி இயக்க வேலூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் கே.எம்.ஜோதீஸ்வரன்பிள்ளை, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட உதவிதிட்ட அலுவலர் கே.கார்த்திகேயன், வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவசான், கமலநாதன், போ.மாதேஷ், சாரண சாரணீய இயக்கத்தின் மாவட்ட பொருளாளர் இரா.புண்ணியகோட்டி, ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன், பெ.முருகேசன், தலைமையாசிரியர்கள் மோகன், மனோகரன், ரவி, எஸ்.எஸ்.சிவவடிவு உள்ளிட்ட பலர் பொருட்களை வரிசைப்படுத்தி, தரம் பிரித்து வகைபடுத்தி லாரியில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.
339 மூட்டை அரிசி அதன் மதிப்பு ரூபாய் மூன்று இலட்சத்தி முப்பத்தி ஒன்பதாயிரம், மளிகை பொருட்கள், துணிகள், ஆயத்த ஆடைகள், பிஸ்கட், பாத்திரங்கள் ஆகியன மதிப்பு ரூபாய் ஐந்து இலட்சத்தி முப்பத்தி ஒன்பதாயிரத்து நான்கு நூற்று நாற்பத்தி ஒன்று ஆக மொத்தம் ரூபாய் எட்டு இலட்சத்தி எழுபத்தி எட்டாயிரத்து நான்கு நூற்று நாற்பத்தி ஒன்று ஆகும்.
செய்தியாளர் : வேலூர் - சரவணன்
கருத்துகள் இல்லை